ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள கிர்க் என்ற நகரில் மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றுக்குள் இன்று ஐஎஸ் தீவிரவாதிகள் நுழைந்து தமது உடல்களில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்ததில் 16-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நகரின் உள்ளே தீவிரவாதிகள் அரசு கட்டிட வளாகம் , காவல்துறை தலைமையக கட்டிடம் உட்பட பல கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் கிர்க்குக் நகரில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள வடபுல மொசூல் நகரை ஈராக் அரசாங்கமும் குர்து படையினரும் இணைந்து மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
Spread the love
Add Comment