கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி மருத்துவமனைக்கு வந்து தமிழக முதல்வர் நலனை விசாரித்துச் சென்ற தமிழக ஆளுநர் தற்போது 2-வது முறையாக அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அரை மணி நேரம் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடி மருத்துவர்களிடம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக தி இந்து தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி ஆளுநர் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கேட்டறிந்திருந்த பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டிருந்தது. முதல்வர் உடல்நிலை தொடர்பாக பல்வேறு வதந்திகள் வெளியாகிவந்த நிலையில் ஆளுநர் மருத்துவமனைக்கு நேரில் சென்றுவந்து அறிக்கை வெளியிட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இன்று ஆளுநர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
Add Comment