இந்தியா பிரதான செய்திகள்

ஜெயலலிதா உடல்நலம் குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புசபை:-

amnesty

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பினார்கள் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டுமென  சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன்  செயற்பட்டதாக தெரிவித்து  ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருப்பதாகவும், 8 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.

இவற்றில் பெரும்பாலான வழக்குகள் தமிழக ஆளும் கட்சியினர் கொடுத்த புகாரின் பேரிலேயே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர்  குறித்த  சரியான தகவல்களை சரியான நேரத்தில்  வழங்குவதன் மூலமே வதந்திகளை நிறுத்த முடியும் எனவும் கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதன் மூலம் அதைச் செய்ய முடியாது எனவும் சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.