விளையாட்டு

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது

india-n-new

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை மொஹாலியில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையில்  கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து வெற்றிபெற்றிருந்தது.

அதேவேளை இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றதால் நாளைய போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் நியூஸிலாந்து களமிறங்கும். அணித்தலைவர் வில்லியம்ஸன் டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வில்லியம்ஸன் சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்திருந்தார்.

மேலும் இந்த  இரு அணிகளுக்கிடையிலும்   இன்று இடம்பெறும் போட்டியானது 96 வது போட்டியாகும். இதுவரை நடந்த 95 போட்டியில் இந்தியா 47 போட்டிகளிலும் நியூசிலாந்து 42 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply