இலங்கை பிரதான செய்திகள்

சிவகீதா பிரபாகரன் உட்பட்ட நான்கு பேருக்கு வரை விளக்கமறியல்

judge

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட்ட நான்கு பேருக்கு எதிர்வரும் 7ம் திகதி வரை வளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசாவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட  விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் பாலியல் தொழில் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் சிவகீதா பிரபாகரன் மற்றும் அவரது கணவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினமே முன்னாள் மேயரின் கணவர் உட்பட  சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

ஏனைய நால்வரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையிலேயே மேற்படி உத்தரவினை நீதவான் பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா  உட்பட ஏழு பேர் கைது

Oct 23, 2016 @ 10:02

arreste

 

மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட  விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் பாலியல் தொழில் நடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.