இந்தியா

இந்திய உள்துறை அமைச்சர் பயணத்தில் பாக்கிஸ்தான் தீவிரவாதம் பற்றி பேச்சுவார்த்தை

rajnath

மூன்று நாள் பயணமாக இன்று பஹ்ரைன் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் தீவிரவாதத்தை பற்றி பஹ்ரைன் உயர்மட்ட அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று நாள் பயணத்தில், பஹ்ரைன் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் பின் அப்துல்லா அல் கலிபாவுடன், ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கும் தீவிரவாதிகளை பற்றி பஹ்ரைன் உயர்மட்ட குழுவிடம் தெரியப்படுத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பஹ்ரைன் தலைமைத்துவம், பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு, எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சினை உள்ளிட்டவற்றை பற்றி விவாதிக்க உள்ளதாக அதில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply