குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கலிபோர்னியாவின் தென் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். Palm Springs நகருக்கு அருகாமையில் இடம்பெற்ற இந்த விபத்தில் லத்தின் அமெரிக்க பிரஜைகளே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்
சில தசாப்தங்களின் பின்னர் கலிபோர்னியாவில் இடம்பெற்ற மிக மோசமான வாகன விபத்து இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்ஸின் சாரதியும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும், வாகனத்தின் முன்பகுதியில் சென்றவர்களே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment