இலங்கை பிரதான செய்திகள்

யாழ்ப்பாண படுகொலைகளை கடுமையாக கண்டிக்கவேண்டும் – லக்சிறிபெர்ணாண்டோ

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்  கொழும்பு

laksri
யாழ்ப்பாணத்தில் 21 ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டதை கடுமையாக கண்டிக்கவேண்டும்,இந்த ஈவிரக்கமற்ற கொலையை செய்தவர்களை எந்தவித தயக்கமும் இன்றி நீதியின் முன்நிறுத்தவேண்டும்.மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்தவரின் தலையில் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதன் மூலம் பொலிஸார் தாங்கள் மோட்டார்சைக்கிளை நிறுத்தமுயலவில்லை என்பதையும் கொலைசெய்வதற்காகவே துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டனர் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
மோட்டார்சைக்கிளை நிறுத்துவதற்காக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதென்றால் அதன் மீது அல்லது அதன் சக்கரங்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருக்கவேண்டும். மேலும் வாகனங்களை இவ்வாறான முறையில் தடுத்துநிறுத்தி சோதனையிடவேண்டிய தேவை எதுவும் யாழ்ப்பாணத்தில் தற்போது இல்லை.இவ்வாறான சம்பவங்கள் 1970, 80 களில் யாழ்ப்பாணத்தில் தீவிரவாத இயக்கங்கள் உருவானநிலையை நினைவுபடுத்துகின்றது.அக்கறையற்ற, இரக்கமற்ற ,இனவெறிபிடித்த பொலிஸ், மற்றும் இராணுவத்தினரின் நடவடிக்கைள் மூலம் வரலாறு தன்னை மீண்டும்  புதுப்பிப்பதற்கு இடமளிக்ககூடாது.
ஓடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்களை கண்காணித்து கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்ற உணர்வு ஏற்படுவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.பல்கலைகழக மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நிறுத்தப்பட்டுள்ள பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறித்து ஆராயவேண்டியதன் அவசியத்தையும் புலப்படுத்தியுள்ளது,மேலும் அந்த பகுதிகளின் பாதுகாப்பை நிர்வகிப்பதற்கு அதிகளவு தமிழ் அதிகாரிகளை உள்வாங்கவேண்டியது,பாதுகாப்பு துறை சீர்திருத்தங்கள் போன்றவற்றை முன்னெடுக்கவேண்டிய தேவையுள்ளதையும் இது புலப்படுத்தியுள்ளது.
தற்போதுள்ள தேசிய பாதுகாப்பு சூழ்நிலையின்கீழ் சட்டமொழுங்கை மாகாணசபைகளிடம் கையளிக்க முடியாவிட்டால்  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசமைப்பின் கீழ் வீதிப்போக்குவரது போன்றவற்றை மாகாணசபைகளிடம் ஓப்படைப்பதை குறித்து சிந்திக்கவேண்டும்.இதுவரையில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் கொல்லப்பட்ட இரு மாணவர்களும் அப்பாவிகள் என்பதும் இரவுவிருந்தொன்றின் பின்னர் தங்கள்வீடுகளிற்கு பயணமாகிக்கொண்டிருந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அவர்களிற்கு இரவுவிருந்துகளில் பங்குகொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததா?இரவில் தடையின்றி மோட்டார்சைக்கிள் ஓடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததா? இந்த படுகொலைகளின் பின்னாள் உள்ள உண்மைகளை கண்டறிவதற்கு நாங்கள் கேட்கவேண்டிய கேள்விகள் இவை.
கொல்லப்பட்ட இருவரும் நல்ல நண்பர்கள்,பல்கலைகழக மாணவர்கள்.இது இரு முக்கியமான உயிர்கள் பறிக்கப்பட்டது தொடர்பானது,கொல்லப்பட்டவர்களிற்கும், அவர்கள் குடும்பத்தவர்கள், நண்பர்கள் , குடும்பத்தவர்களிற்கும் இது பாரிய இழப்பு.
மேலும் எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி காயமடைந்வரை பொலிஸாரே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்,மருத்துவர்களே அவர்களது தலையில் துப்பாக்கிசூட்டினை கண்டுள்ளனர்.( இம்முறை திவயினவின் இரு செய்தியாளர்கள் சிங்கள வாசகர்களிற்கு உண்மையை தெரியப்படுத்தியுள்ளனர்)
யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும்  இராணுவத்தன் பொலிஸின் பிடியின் கீழ் வைத்திருக்கவேண்டும் என வாதிடும் சிங்களவர்கள் இந்த சம்பவம் குறித்து வெட்கமடையவேண்டும்.முன்னைய அரசாங்கம் போல இல்லாமல், தற்போதைய அரசு உடனடியாக சந்தேகநபர்களை பணியில் இருந்து அகற்றி, கைதுசெய்து,சம்பவம் மூடிமறைக்கப்படுவதை தடுத்துள்ளது.இதேபோன்று நீதித்துறை மற்றும் ஓழுக்காற்று நடவடிக்கைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட்டு நீதித்துறை வழங்கப்படவேண்டும்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஐந்துபேர், இதன்காரணமாக யாழ்ப்பாணம் இந்த சம்பவத்தை கடுமையாக எதிர்க்கவேண்டும்.
இது யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு மாத்திரமான விடயமல்ல, ஏனைய பல்கலைகழகங்களும் இதனை கடுமையாக எதிர்க்கவேண்டும்,

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap