Home இலங்கை சாதகமான பதில் கிடைக்கும் வரை யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறாது – கந்தசாமி ரஜீவன்

சாதகமான பதில் கிடைக்கும் வரை யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறாது – கந்தசாமி ரஜீவன்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு  நீதி கோரி இன்று யாழ். அரச அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜருக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை யாழ். பல்கலைக்கழகத்தின் சகல பீடங்கங்களின் கல்விச் செயற்பாடுகளும் இடம்பெறாது என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கந்தசாமி ரஜீவன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர், செய்தியாளர்களுக்கு  கருத்துத் தெரிவித்த போதே இதனை அவர் தெரிவித்தார்.

மேலும் இதன்போது மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவர் அலெக்ஸ் மற்றும் சட்டபீட மாணவர் சாமர ஆகியோரும் ஆங்கில, சிங்கள மொழிகளில் அறிக்கையினைப் படித்திருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More