உலகம் பிரதான செய்திகள்

மால்ரா தீவில் இடம்பெற்ற விமான விபத்தில் பிரான்ஸ் சுங்கத் துறை அதிகாரிகள் பலி

 

A plane which crashed on take-off from Malta International Airport (Ed De Gaetano/Twitter/PA)

மால்ரா தீவின்  மால்ரா சர்வதேச விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  லுகா விமான நிலையத்தில் இருந்து லிபியாவிற்கு புறப்பட்ட விமானமானது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிலேயே மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில்  போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக சென்ற பிரான்ஸ் நாட்டின் சுங்கத் துறை அதிகாரிகள்  உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.  மறுஅறிவித்தல்  வரை வரை விமான நிலையம் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மால்ரா மத்திய தரைக்கடலின் நடுப் பகுதியில் துனிசியாவிற்கும் துருக்கிக்கும் இடையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.