குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த நாள் அன்று புதிய அரசியல்கட்சி ஆரம்பிக்கப்பட உள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினால் இந்த புதிய கட்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு 71 வயது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மில்லியன் அங்கத்தினர்களை கட்சியில் இணைத்துக்கொள்ள கூட்டு எதிர்க்கட்சி உத்தேசித்துள்ளது. தொகுதி அமைப்பாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதுடன் புதிய கட்சி அமைப்பது குறித்து பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Spread the love
Add Comment