குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஈராக்கின் யசீதி பெண்களுக்கு ஐரோப்பிய பாராளுமன்றினால் வழங்கப்படும் Sakharov விருது வழங்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளினால் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்ட இரண்டு யசீதி பெண்கள் தற்போது மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
Nadia Murad மற்றும் Aji Bashar ஆகியோரே இவ்வாறு விருது பெற்றுக்கொள்கின்றனர். ஐரோப்பாவில் புகலிடம் பெற்றுக் கொண்ட இந்தப் பெண்கள் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்த விருது வழங்கும் நிகழ்வு நடத்தப்பட உள்ளது. இந்த விருதுடன் 50,000 ஸ்ரெலிங் பவுண்ட்களும் வழங்கப்பட உள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம், ஐ.எஸ் தீவிரவாதிகளினால் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment