குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கையில் காவல்துறை நிலையங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். காவல்துறை நிலையங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மஹியங்கனை ரிதியமல்லியத்த பகுதியில் புதிய பொலிஸ் நிலையமொன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment