இலங்கை

மரநடுகை மாதத்தில் இந்த மண்ணுக்குச் சொந்தமான மரங்களுக்கு முக்கியத்துவம் – பொ.ஐங்கரநேசன்

05
வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த மண்ணுக்குச் சொந்தமான மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடுகை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (30.10.2016) அவர்; ஊடகங்களுக்கு அனுப்பிவைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்,

வடக்கில் மரநடுகையை முன்னெடுப்பதற்குச் சாலச்சிறந்ததொரு மாதமாகக் கார்த்திகை மாதமே உள்ளது. எமது மண்ணுக்கு அதிக அளவு மழைவீழ்ச்சியைத் தரும் மாதம் கார்த்திகை. அதனாலேயே, ஷகார்| என்ற மழையைச் சுட்டுகின்ற பெயரை இம்மாதத்தின் பெயராகச் சூட்டியுள்ளோம். மழைநீரால் மாத்திரம் அல்ல, தமிழ் மக்களின் கண்ணீரால் நனையும் மாதமாகவும் கார்த்திகை உள்ளது. மண்மீட்புக்காகப் போராடி உயிர்துறந்த எமது உறவுகள் அனைவரையும் நினைத்துக் கூட்டாகக் கண்ணீர் உகுக்கும் நாட்களும் இம்மாதத்துக்குள்ளேயே அடங்குகின்றன. மரங்களே எமது ஆதித் தெய்வங்கள். மரங்களை வணங்குகின்ற தொன்மையான வழிபாட்டு முறையைக்கொண்ட  நாம் மரணித்தவர்களின் நினைவாக மரங்களை நட்டுப் போற்றும் மாண்பையும் கொண்டிருக்கிறோம். இவற்றின் அடிப்படையிலேயே கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

03

ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்| என்பதை மகுட வாசகமாகக் கொண்ட மரநடுகை மாதத்தின் நடப்பு ஆண்டுக்குரிய கருப்பொருள் சொந்த மண் சொந்த மரங்கள்;| என்பதாகும். எமது சொந்த மண்ணில் எம்மோடு சேர்ந்தே பரிணாமித்து வளர்ந்த சொந்த மரங்கள் ஏராளம் உண்டு. எமது மண்ணின் செழுமையை  இற்றைவரை தக்க வைத்திருப்பவை இந்த உள்ளூர் மரங்கள்தான.; அந்த வகையில் உயிர்ச்செழிப்பின் உயிர் நாடியாக விளங்கும் உள்ளூர் மரங்களுக்கு இந்த ஆண்டு மரநடுகை மாதத்தின்போது கூடுதல் முக்கியத்துவம் வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடுகை செய்வதோடு தொடர்ச்சியாகப் பராமரிப்போம் என்ற உறுதிமொழியுடன் எமது சுற்றாடல் அமைச்சை அணுகும் எவருக்கும் எம்மால் இயன்ற அளவுக்கு மரக்கன்றுகளை வழங்குவதற்கு நாம் சித்தமாயுள்ளோம்.  எமது மண்ணின் பசுமைமையும் எமது வருங்காலத் தலைமுறையின் வளமான வாழ்வையும் பாதுகாக்கும் இந்தப் புனிதமான கைங்கரியத்தில் பாடசாலைகள், கூட்டுறவு அமைப்புகள், சனசமூக நிலையங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் சங்கங்கள், வணக்கத்தலங்கள் ஆகியவற்றோடு, பொதுமக்கள் அனைவரையும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

04

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.