இலங்கை பிரதான செய்திகள்

பலவந்தமாக புத்தர் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் இறக்காம பிரதேச மக்களுடன் ஹக்கீம் கலந்ரையாடியுள்ளார்.

fb_img_1477823740443

இறக்காமம், மாணிக்கமடு பகுதியில் நேற்று (29) சனிக்கிழமை புதிதாக புத்தர் சிலையொன்று பலவந்தமாக நிறுவப்பட்டமை தொடர்பில் அப்பிரதேச மக்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் அடிப்படையில் அமைச்சர் ஹக்கீம் இன்று (30) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இறக்காமம் ஸ்ரீ மாணிக்கமடு கோயில் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

, இக்கலந்துரையாடலின் போது  அமைச்சர் ஹக்கீம்; தான் இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருடன் கதைத்துள்ளதாகவும் இப்புத்தர் சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டதால் இதனை நீதிமன்றத்தினூடாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்  இந்த விடயத்தில் தமிழர்கள் ஆத்திரப்பட்டு ஆவேசப்படக்கூடாது எனவும்  இந்த அரசாங்கம் உருவாக்கியதன் பிற்பாடு நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது நல்லிணக்கத்துக்கு பாதகம் விளைவிக்கக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார்.

fb_img_1477823743629

ம்  வழிய வம்புக்கு இழுக்கின்ற சம்பவமாக இது பார்க்கப்படுகின்றது எனவும்  இந்த விடயம் சட்டத்தையும் ஒழுங்கையும் தோற்றுவிப்பதில் குந்தகம் விளைவிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் நீதிமன்ற தடையையும் மீறி எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது மதத்தை பிரதிபலிக்கும் சின்னத்தையோ அடையாளத்தையோ அனுமதியின்றி பலவந்தமாக வைப்பதென்பது வணக்க வழிபாட்டுக்கோ ஆராதனைக்கோ அல்ல எனவும் அமைச்சர் ஹக்கீம்  தெரிவித்துள்ளார்.

fb_img_1477823747047

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.