குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
எம்மைத் திருடர்கள் எனக் கூறும் அரசாங்கம் பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். இந்த அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மட்டுமன்றில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களைக் கூட நடாத்த அஞ்சுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹின் லங்கா நிறுவனம் தமது ஆட்சிக் காலத்தில் லாபமீட்டியதாகவும் தற்போது அந்த நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் வற் வரி உயர்வினால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவர் என குற்றம் சுமத்தியுள்ளார். இந்த அரசாங்கம் ஏற்கனவே வீழ்ச்சியடைந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
Add Comment