சிறுபான்மையினரை அச்சுறுத்தும் செயற்பாடுகள் நல்லாட்சியிலும் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். இறக்காமம் மாணிக்கமடு பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தமிழ் முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக வாழும் இடங்களில் புத்தர் சிலைகளை வைத்து அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும்செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்வது கண்டிக்கத்தக்க விடயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் பெரும்பானமையின அரசியல்வாதிகள் மௌனம் சாதிப்பது மக்கள் பிரதிநிதிகளான அவர்களின் நேர்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவருடனும் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழவே விரும்புவதாகவும் தமது அரசியல் சுயலாபத்திற்காக அதனை சீர்குலைக்க விரும்பும் சிலரே இவ்வாறான சதி நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Add Comment