இலங்கை பிரதான செய்திகள்

புலிகளை தோற்கடித்த படையினரால் ஹாவா குழுவினை கட்டுப்படுத்த முடியவில்லை – சம்பிக்க ரணவக்க

champika-ranawaka
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கச் செய்த படையினரால் ஹாவா குழுவினை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் இந்த குழுவினை கட்டுப்படுத்த முடியாமை ஆச்சரியமளிப்பதாகவும்  அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மிகவும் பலம்பொருந்திய பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த படையினரால், ஹாவா என்ற பாதாள உலகக் குழுவினை கட்டுப்படுத்த முடியாமை சர்ச்சையாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழுவினர் வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

1 Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • ‘தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கச் செய்த படையினரால் ஹாவா குழுவினை கட்டுப்படுத்த முடியாதா’, எனக் கூறும் அமைச்சர் திரு. சம்பிக்க ரணவக்க, இப்பொழுது கூட உண்மையை ஏற்கும் மனநிலையில் இல்லை, என்பது புரிகின்றது! இலங்கை ஆளும் அரசினதும், இராணுவத்தினதும் சுயரூபம் மாறாத வரை, ‘ஹாவா போன்ற வாள்வெட்டுக் குழுக்களை அழிக்க முடியாது’, என்பதே உண்மை! கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியும் இவர்களால் உண்மையை நெடுநாட்களுக்கு மறைக்க முடியாது! மேலும், சர்வதேச மற்றும் ஆசிய வல்லரசுகள் உட்பட, 23ற்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து வஞ்சகமாகப் புலிகளை அழித்த உண்மையை மறைத்து, அதற்கு இலங்கை இராணுவம் மட்டும் உரிமை கோருவதை இவர் இன்னமும் நம்புவது விந்தைதான்!

    இவர் திரு. மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்தாலும், இன்னமும் மகிந்த சிந்தனையிலேயே இருக்கின்றார்? இன்றைய குழப்பங்கள், ஹாவா, மற்றும் பிரபாகரன் படை போன்ற எல்லாமே கூட்டு எதிரணியினரால் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன, என்பதை யாராலும் மறுக்க முடியாது! ‘எதிர்காலத்தில் யாராலுமே வடக்குக்குச் செல்ல முடியாததொரு நிலைமை ஏற்படும்’, எனக் கூறிப் பச்சை இனவாதத்தைக் கக்கும் திரு. மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் கருத்துக் கூறும் திராணி இவருக்கு இல்லையே? யாழில் கடமையில் இருக்கும் தமிழ்ப் போலீசாரை மாற்றலாகிச் செல்லும் படி கோரித் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் இவர்களின் நோக்கம், தமது சதி நடவடிக்கைகளை மறைக்கவேயன்றி வேறு எதற்கு? வெற்றிவாதம் பேசும் இவர்கள் வடக்கில் கடமை செய்வதென்பது, இன சௌஜன்யத்தை என்றைக்கும் ஏற்படுத்தாது! மாறாக, உரிமைகளைப் பறிகொடுத்த இனத்தை அடிமை இனமாகப் பார்க்கின்ற, நடத்துகின்ற ஒரு மனவுணர்வையே ஏற்படுத்தும்?

    முதலில் ஆட்சியாளர்கள் இது குறித்துச் சிந்திக்காத வரை, நாட்டிற்கு விடிவென்பது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை!