நைஜீரியாவில் விவசாயிகள் மற்றும் மேய்ப்பர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில் ஊர்விட்டு ஊர்மாறிச் சென்று ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்களை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற புலானி எனப்படும் நாடோடிகள் இனத்தை சேர்ந்தவர்கள் நைஜர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மேய்ப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, சில கால்நடைகள் ஒருவரின் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தனைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையில் மூண்ட மோதலில் 18 பேர் உயிரிழந்ததுடன் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
Spread the love
Add Comment