குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. முன்னாள் அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என இந்தக் கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சி தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த புதிய அரசியல் கட்சியை பயன்படுத்திக் கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசியல் கட்சியின் தவிசாளராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கடமையாற்ற உள்ளார்.இந்தக் கட்சிக்கு அனுமதி வழங்குமாறு கடந்த வாரம் விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கட்சியினை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ வழி நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment