குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கை இசைத்துறை ஜாம்பவான் டபிள்யூ.டி. அமரதேவ தனது 88ம் வயதில் காலமாகியுள்ளார். சுகவீனமுற்ற அமரதேவ இன்று காலை கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1927ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி பிறந்த அமரதேவ, வயலின் வாத்தியக் கலைஞரும் பாடகருமான டபிள்யூ.டி.அமரதேவ இலங்கை இசைத்துறையின் மிகச் சிறந்த பாடகராக கருதப்படுகின்றார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விரபங்கள் பின்னர் வெளியிடப்பட உள்ளது.
Add Comment