குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மியன்மாரில் முஸ்லிம் அல்லாதோருக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவது பாதகமானது என மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. மியன்மாரின் ராக்கினி மாநிலத்தில் இவ்வாறு முஸ்லிம் அல்லாதோருக்கு அந்நாட்டு இராணுவத்தினர் ஆயுதங்களை வழங்கியுள்ளனர்.ரொஹினியா சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஆயுததாரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்படுவது உரிமை மீறல்களுக்கு வழியமைக்கும் என குற்றம் சுமத்தியுள்ள மனித உரிமை அமைப்புக்கள் ரொஹினியா முஸ்லிம்கள் இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Spread the love
Add Comment