இசை மேதை பண்டித் டபிள்யு. டீ அமரதேவ அவர்களின் தொலைநோக்கை நாட்டின் எதிர்கால தலைமுறையிடம் எடுத்துச்செல்வதற்கு அமரதேவ கேந்திர நிலையம் என்ற பெயரில் ஒரு தேசிய மத்திய நிலையத்தை தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான வழிகாட்டல்களை அரசாங்கத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி கலைஞர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசத்தை எழுச்சிபெறச்செய்த மிகப்பெரும் கலைஞரான காலம்சென்ற டபிள்யு.டீ அமரதேவ அவர்களின் இறுதி நிகழ்வு பூரண அரச மரியாதையுடன் இன்று (05) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற போது இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இரங்கல் உரை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Add Comment