இந்தியா பிரதான செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலில் இந்திய வீரர் கொல்லப்பட்டுள்ளார் .

india-pakistan-border
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இருமுறை துப்பாக்கிப் பிரயோகம்  மேற்கொண்டதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மோதலில்  இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல்  பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியருகே உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் இந்தியப் படையினரும் மேற்ற்கொண்டு வரும் நிலையில்  இருதரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தியச் செய்திகள்  தெரிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply