இலங்கை பிரதான செய்திகள்

நல்லாட்சி அரசாங்க அமைச்சர்கள் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் – மஹிந்த

mahintha rajapaksha12_CI
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

நல்லாட்சி அரசாங்கத்தில் பதவி வகித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் தம்முடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.  அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது குறித்து இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான மோசடிச் சம்பவம் மத்திய வங்கி மோசடி சம்பவம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடிக்கு அரசாங்கத்தின் அனைத்து தரப்பினரும் பொறுப்பு சொல்ல வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் ஹாவா குழுவினை கோதபாய இயக்குவதாக சுமத்திய குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் மீது தமிழ் முஸ்லிம் மக்களின் நன்மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply