பிரதான செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்து அணித் தலைவர் பதவி விலகக்கூடிய சாத்தியம்

eng-captain
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைவர் அலிஸ்டயர் குக் பதவி விலகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு கிரிக்கட் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் கிரிக்கட் சஞ்சிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் இது பற்றி குக் கூறியுள்ளார்.

2012ம் ஆண்டு முதல் குக் இங்கிலாந்து அணியின் தலைவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 135 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்றுள்ள குக் இதுவரையில் 10,688 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார். அணித் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் தொடர்ந்தும் அணியில் துடுப்பாட்ட வீரராக நீடிக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.