இலங்கை பிரதான செய்திகள்

கட்சிக்கு மஹிந்த ராஜபக்ஸ தலைமை தாங்குவதனையே விரும்புகின்றேன் – ஜீ.எல்.பீரிஸ்

gl-peris-mahintha-rajapaksha

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
புதிய கட்சிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமை தாங்குவதனையே விரும்புவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை வழிநடத்தக்கூடிய வல்லமை , ஆற்றல் முன்னாள் ஜனாதிபதியிடமே காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.  எனினும் இதுவரையில் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்வது குறித்து மஹிந்த எந்தவொரு உறுதிமொழியையும் வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியுடன் நெருங்கிச் செயற்பட விரும்புவதாகவும் தமது கட்சி உறுப்புரிமையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிர்வாகம் ரத்து செய்தமை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல எனவும் இதற்கு எதிர்ப்பை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers