இந்தியா பிரதான செய்திகள்

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என தகவல்!

paravai_3074061f
இந்தியாவின் கேரளமாநிலத்தில் பறவை காய்ச்சால் ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தி இந்து தெரிவித்துள்ளது. கேரள மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள தமிழ்நாடு பகுதிகளில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறையினர் முகாம்களை அமைத்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு பறவைக் காய்ச்சல் தடுப்பு மருந்து அடிக்கப்படுகின்றது.

கேரளாவில் கண்டறியப்பட் டுள்ள பறவைக் காய்ச்சல் தமிழ கத்தில் பரவிவிடக் கூடாது என்ப தற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்டத்தில் அமைக் கப்பட்டுள்ள கேரள எல்லையோர முகாம்களில் ஆய்வில் ஈடுபட்டி ருந்த தமிழக கால்நடை பராமரிப் புத் துறை இணை இயக்குநர் கே.கமலேஷ் தானப்பன் கூறியுள்ளார்.

இதேவேளை கேரளாவில் நோய் பாதிப்பு இல்லை என மத்திய அரசு அறிவிக்கும் வரை தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடரும்என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

6 மாவட்டங்களில் 26 சோதனைச் சாவடிகளில் நோய் தடுப்பு மருந்து தெளிப்பு முகாம்கள் அமைக்கப்பட் டுள்ளதாகவும் இதேபோல, தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளிலும் தொடர் ஆய்வுகள் நடப்பதாகவும் தெரிவித்த அவர் தமிழகத்துக்கு இதுவரை பாதிப்பு இல்லை. இதுபோல தமிழக உயிரி யல் பூங்காக்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார்.

வலசைப் பறவைகள் வந்து செல்லும் பறவைகள் சரணாலயங் களிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடு கள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மருந்து தெளிப்புக்கு, எளிதில் பயன்படுத்தக்கூடிய சிறிய அளவி லான கருவியை தமிழக கால்நடை பராமரிப்புத் துறை சோதனை முறையில் ஒருசில இடங்களில் பயன்படுத்துவதாகவும், விரைவில் அந்த கருவி அனைத்து மாவட்டங் களிலும் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.