Home இலங்கை யாழில் தொடரும் கைதுகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு :

யாழில் தொடரும் கைதுகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு :

by admin

பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினரினால்  யாழில் தொடரும் கைது நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் அண்மைக் காலமாக தொடர்ந்து இடம்பெற்ற அசம்பாவிதங்களை தொடர்ந்து, பயங்கரவாத தடுப்புப்பிரிவு  காவல்துறையினர் யாழில் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேடுதல் நடவடிக்கைகளின் போது, வடக்கில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் ஆறு பேர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More