பிரதான செய்திகள் விளையாட்டு

ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது

Sri Lanka players celebrate the wicket of Zimbabwe batsman Carl Mumba during the test cricket match at Harare Sports Club in Harare, Thursday, Nov. 10, 2016. (AP Photo/Tsvangirayi Mukwazhi)

ஹராரேவில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 257 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் இலங்கை 504 ஓட்டங்களையும்  ஜிம்பாப்வே 272 ஓட்டங்களையும்  எடுத்திருந்தன. 2-வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 258 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை அணி ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

491 ஓட்ட இலக்குடன் துடுப்பெடுத்தாடிய  ஜிம்பாப்வே அணி நேற்றைய  இறுதிநாள்  ஆட்டத்தில் 58 ஓவர்களில் 233 ஓட்டங்களையும்  அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிகபட்சமாக இர்வின் 72 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத் 8 விக்கெட்கள் வீழ்த்தினார். முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணியே வெற்றி பெற்றிருந்தமையினால்; 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 14 other subscribers