சமூக ஊடக வலைதளமானஃபேஸ்புக்கில் இருக்கும் அசாதராண செயலி பிழையால், பல பேர் இறந்து விட்டதாக முத்திரை அறிவிப்பு வெளியானது.

ஃபேஸ்புக்கின் தலைமை செயலதிகாரியான மார்க் ஸூகர்பெர்க் உள்பட ஃபேஸ்புக்கின் பல பயனாளர்களின் சுயவிவர பக்கங்களில் இந்த செய்தி தவறுதலாக தோன்றியிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட சில பயனாளர்கள், தாங்கள் இன்னும உயிருடன் இருப்பதை தெரியப்படுத்துவதற்காக தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தங்களின் தற்போதைய நிலை பற்றிய புதிய பதிவுகளை இட்டுள்ளனர்.
இதற்காக மன்னிப்பு கேட்டிருக்கும் இந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், தற்போது இந்த தவறு சரிசெய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
BBC
Spread the love
Add Comment