இந்தியா பிரதான செய்திகள்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இருவர் கைது :

arrest
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின்; சர்வதேச எல்லையான ஆர்.எஸ் புராவில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து சமூக வலைதளத்தில் இரகசிய தகவல்களை வெளியிட்டு வந்த 2 பேரை கைது செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருவர் சர்வதேச எல்லைப் பகுதியான சுசத்கார்க்கில் பாதுகாப்பு நிறுவனங்களின் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பதாக  காவல்துறையினருக்கு கிடைத்த  தகவலை அடுத்து குறித்த  2 பேரையும் கைது செய்து  விசாரணை நடத்தியதில்  அந்த இருவரும் இராணுவ முகாம்கள், பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் ஆகியவற்றின் அமைவிடங்களை படம் பிடித்து பாகிஸ்தானுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியமை தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.