இலங்கை பிரதான செய்திகள்

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் போது நேரம் ஒதுக்கப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

blame
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் போது நேரம் ஒதுக்கப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதத்தின் போது, தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன்போது கூட்டு எதிர்க்கட்சியினர் ஆற்றிய உரைகள் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகத்தின் ஊடாக பிரபல்யம் அடைய சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் தமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்படும் என சபாநாயகர் உறுதியளித்துள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap