குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
கிளிநொச்சி கனகாம்பிகை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு புதிய நூலக கட்டிடம் அமைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 16-11-2016 புதன் கிழமை இந் நிகழ்வு இடம்பெற்றது. செலிங்கோ காப்புறுதி நிறுவனத்தின் ஏழு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டிலும் கிளிநொச்சி படையினரின் மனித வலுவையும் பயன்படுத்தி அமைக்கப்பட்ட நூலக கட்டிடமே மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி 57 படை பிரிப்பின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் அநுர சுபசிங்க மற்றும் கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தின் முறைசார் கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் த.பேரின்பராசா பாடசாலையின் அதிபர் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
Spread the love
Add Comment