குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் ஊடகங்களை அடக்க முயற்சிப்பதாக கபே எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. ஊடக சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்றன தொடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் அண்மையில் ஊடகங்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள், பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கள் என்பன குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கபே குறிப்பிட்டுள்ளது. ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அரசாங்கம் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
Spread the love
Add Comment