குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறையினர் நாட்டின் கௌவரத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காவல்துறையினர் , காவல்துறை திணைக்களம் மற்றும் நாட்டின் கௌரவம் ஆகியனவற்றை உறுதி செய்யும் வகையில் கடமையாற்ற வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து காவல் நிலையங்களிலும் கடமையாற்றி வரும் அதிகாரிகள் தேசிய ஒற்றுமையை உறுதி செய்யும் வகையில் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள பிரதமர் காவல்துறை உத்தியோகத்தர்களை பயிற்றுவிக்கும் நோக்கில் பல்கலைக்கழகமொன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment