குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லிபியாவில் குரங்கு ஒன்றினால் ஏற்பட்ட மோதல் சம்பவம் பலரது உயிரை காவு கொண்டுள்ளது. தென் லிபியாவின் நகர் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த குரங்கு ஒன்று பாடசாலை மாணவி ஒன்றை தாக்கிக் காயப்படுத்தியுள்ளதனால் ஆத்திரமுற்ற மாணவியின் உறவினர்கள் குரங்கையும் குரங்கின் உரிமையாளர்கள் மூவரையும் கொலை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் ஏற்பட்ட கோஸ்டி மோதலில் மொத்தமாக 20 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த மோதலின் போது மோட்டார்கள் உள்ளிட்ட கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment