இந்தியா பிரதான செய்திகள்

தஞ்சாவூர் – புதுவை – திருப்பரங்குன்ற தேர்தல் முடிவுகள் :

india-election
தஞ்சாவூர் தொகுதிக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எம். ரெங்கசாமி 1,01,362 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி, 74,488 வாக்குகளைப் பெற்றி தோல்வியடைந்தார்.

புதுவையில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், புதுவையின் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார்.  நாராயணசாமி 18, 709 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், அதிமுக வேட்பாளரான ஓம்.சக்தி சேகர் 7,565 வாக்குககளை மட்டுமே பெற்றுள்ளார். இதனால், 11,144 வாக்குகள் வித்தியாசத்தில் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார்.

அதேவேளை திருப்பரங்குன்றத்திலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர் போஸ்  42,670 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap