வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர் பதிவுகளை கட்டுப்படுத்தியதன் காரணமாக எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக உரிய தரப்பினருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றுள்ளது
பாராளுமன்ற குழுக்கூட்ட அறையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை கவனத்திலெடுத்த ஜனாதிபதி கொள்கை ரீதியில் அரசினால் கல்விக்காக வழங்கப்பட்டுள்ள வசதிகள் ஒருபோதும் இல்லாமல் செய்யப்பட மாட்டாதென குறிப்பிட்டார்.
வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர் பதிவுகளை கட்டுப்படுத்தியதன் காரணமாக பட்டப்படிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு அநீதி ஏற்படாதவாறு புதிய செயற்திட்டமொன்றை இரண்டு வாரங்களுக்குள் முன்வைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment