இலங்கை பிரதான செய்திகள்

அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக சந்தியா எக்நெலிகொட முறைப்பாடு

santhiya
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி சந்தியா எக்நெலிகொட தெரிவித்துள்ளார். பிரகீத் எக்நெலிகொட தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு ஆளும் கட்சியின் சிலர் அழுத்தம் பிரயோகித்து வருவதாக தெரிவித்துள்ள அவர் தமக்கு பல்வேறு வழிகளில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் இந்த மனு விசாரணைகளுக்கு இடையூறாக அமைந்துள்ளதாக குறித்த தரப்பினர் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் தமது உயிரினும் மேலான இந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply