இந்தியா பிரதான செய்திகள்

ஹரியானாவில் ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தொழிலாளர்கள் பலி

fire

இந்தியாவின் ஹரியானாவில் கம்பளி ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில்  ஏற்பட்ட தீ விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த வேளை  ஆலையின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்ததாகவும்  தீ  விரைவாக ஏனைய பகுதிகளுக்கும்  பரவியதனால் அதில்  வெளியேற முடியாமல் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு  சென்ற தீயணைப்பு படையினர்  தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும்  இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும் 15க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.