குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பௌத்த மதத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இன்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மதத்தை பாதுகாத்தல் மற்றும் வலுவூட்டல் தொடர்பிலான தற்போதைய அரசியல் சாசனத்தில் காணப்படும் விடயங்களில் மாற்றம் செய்யப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பௌத்தர் என்ற ரீதியில் தாம் கடமைகளை தவற விடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்தர் என்ற ரீதியில் ஜனாதிபதி தன் கடமைகளை தவற விடப் போவதில்லை! காரணம், இன மற்றும் மதவாதச் சகதியில் ஊறிய சிங்களச் சமூகத்துடன் சுமுகமாக அரசியல் பயணம் செய்வதற்கு அது மிகவும் இன்றியமையாததாகும்! தன்னை ஒரு பௌத்தனாகவே பார்க்கும் அவர், தான் பல்லின/ மத மக்கள் கொண்ட ஒரு நாட்டின் தலைவர் என்பதை மறந்து பேசுவது துர்லபமே?
இவர் போன்றோர் ஆட்சியில், இனப்பிரச்சனைக்கான காத்திரமானதொரு தீர்வை எதிர்பார்ப்பதும், துர்லபமே!