இலங்கை பிரதான செய்திகள்

போக்குவரத்து விதிகளை மீறும் பிரமுகர்களின் வாகனங்கள் தொடர்பில் சட்டம் :

road-rules

போக்குவரத்து விதிகளுக்கு கட்டுப்படாமல் பயணிக்கும் பிரமுகர்களின் வாகனங்கள் தொடர்பில் வாராந்தம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலீஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற  தேசிய வீதிப் பாதுகாப்பு வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தலில்லாத இந்த காலத்தில் முறையின்றி பயணிக்கும் வாகனங்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துதல் தொடர்பிலும் அவ்வாறான வாகனங்களில் பயணிப்பவர்கள் பிரமுகர்கள்தானா என்பது தொடர்பாகவும் கவனித்து பார்க்கவேண்டும் எனவும் குறித்த அறிக்கையை பொலீஸ் மா அதிபர் வழங்கியவுடன் அது தொடர்பாக ஆராய்ந்து பார்த்து உரிய தரப்பினரை வரவழைத்து தனிப்பட்டமுறையில் அவர்களுடன் கலந்துரையாடப் போவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.