அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இரவுவிடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
கலிபோர்னியா மாநிலத்தின் ஒக்லாண்டில் அமைந்துள்ள கோஸ்ட் ஷிப் என்ற விடுதியில் வெள்ளிக்கிழமை இரவு உள்ளுர் நேரம் இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வு ஒன்றில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்த வேளை விடுதியின் ஒரு பகுதியில் தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும் உயிரிழப்புகள் அதிகமானதாக இருக்கலாம் எனவும் உள்ளுர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Spread the love
Add Comment