இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தலின் போது பல பொருட்களை வழங்கிய போதிலும் மஹிந்த தோல்வியடைந்தார் – மஹிந்த அமரவீர

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
mahintha-amaraweera_ci
ஜனாதிபதி தேர்தலின்போது பல பொருட்களை மஹிந்த ராஜபக்ஸ மக்களுக்கு வழங்கிய போதிலும் தேர்தலில் தோல்வியடைந்தார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தங்காலை அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கப்பட்டது, விதை நெல்லுக்காக பணம் வழங்கப்பட்டது, சில ஆடைகள் வழங்கப்பட்டது, ஒவ்வொரு வீட்டுக்கும் ஐந்து கிலோ உருளைக் கிழங்கு வழங்கப்பட்டதுஎன அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மக்களுக்கு பல பொருட்களை இலவசமாக வழங்கிய போதிலும் மஹிந்த ராஜபக்ஸவினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.