இலங்கை பிரதான செய்திகள்

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேசத்திடம் முறைப்பாடு செய்யப்படும் – தினேஸ் குணவர்தன:-

Dinesh mahi_CI

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேசத்திடம் முறைப்பாடு செய்பய்படும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச சமூகத்திடம் முறைப்பாடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பாராளுமன்றிற்கு அருகாமையில் நடத்தப்பட்ட காவல்துறையினரின் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து பாராளுமன்றில் நாளை பேச உள்ளதாகவும் பிரதமரிடம் இது குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.