குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
இலங்கைப் போக்குவரத்துச் சபை பாரியளவில் வருமானத்தை பதிவு செய்துள்ளது. அண்மைய தினங்களில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களினால் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக இவ்வாறு வருமான அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2ம் திகதி 120 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், சுமார் 128 பஸ்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சராசரியாக 72 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டும் இலங்கைப் போக்குவரத்துச் சபை போராட்டம் நடத்தப்பட்ட நாட்களில் கூடுதல் வருமானத்தை ஈட்டியுள்ளது. வழமையான நாட்களை விடவும் 60 வீத வருமான அதிகரிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comment