பாகிஸ்தானின் கராச்சியில் விடுதி ஒன்றில் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கராச்சியில் அமைந்துள்ள ரிகண்ட் பிளாசா என்னும் விடுதியின் சமையலறையின் அடித்தளத்தில் உண்டான தீ, விடுதியின் ஆறாவது மாடி வரையும் பரவியதாகவும் 3 பேர் பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்ததுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விடுதியில் தங்கியிருந்த சுமார் 100 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் காயமடைந்தவர்களில் சில வெளிநாட்டவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதும் தீவிபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment