குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கை சட்ட மா அதிபர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். இன்றைய தினம் குறித்த வழக்கு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. திவிநெகும திட்ட நிதிகள் மோசடி செய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
Add Comment