தமிழகத்தின் புதிய முதல்வர் ஓ. பன்னிர் செல்வமும், எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போல் இலங்கை தமிழர்கள் நலனில் கவனம் கொண்டு இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் என வடக்கு மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
தமிழகத்திலிருந்து வெளிவரும் தி இந்து தமிழ் நாளிதழுக்கு கருத்துத் தெரிவித்தபோது அவர் இதனைக் கூறியுள்ளார். இதுவே ஈழத் தமிழர்களின் நம்பிக்கை என்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலிலதா, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோது தொடர்ந்து குரல் கொடுத்தவர் என்றும் மேலும் தமிழக மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பல முயற்சிகளை செய்தவர் என்றும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
Spread the love
Add Comment